ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மாற்று திறனாளி யார் ?

அஸ்ஸலாமு அழைக்கும் ...

     மாற்று திறனாளி,ஊனமுற்றவர் என்ற பாகுபாடு இஸ்லாத்தில் கிடையாது. அங்க அவையங்கள் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டவர் ஊனமுற்றவர் என்கிறோம்.

     ஆரோக்கியத்தால் ஊனமுற்று உண்ண முடியாமலோ உறங்கமுடியாமலோ உள்ளவர்களும், மனஉளைச்சல் டென்ஷனால் பாதிக்கப்பட்டவர்களும் ஊனமுற்றவகள் தான்.உழைக்காத சோம்பேறியும் ஊனம் தான்.

     உடல் ஊனம் அல்லது உள்ள ஊனம் இந்த இரண்டு பாதிப்புகளில் எது நம்மை தொட்டாலும் நாம் குறையுள்ள ஊனமானவர்கள் தான். எனவே குறைபாடுடையவர்களை அவர்களின் மனம் வருந்தும் படி குருடன் நொண்டி ஊமை கட்டையன் தடியன் என்று கூறக்கூடாது! ஏழை-பிச்சைகாரன் என்ற வார்தைகளால் வஞ்சனை சொற்களும் கூறக்கூடது.

   கருப்பன் சிவப்பன் அரபியன் அஜமி(அறியாதவன்)படிக்காதவன் முட்டாள் என்றும் திட்டக்கூடாது என்பதனை அருள்மறை குர்ஆனும் அண்ணல் பெருமானாறும்  கூறுகிறார்கள்.

   உங்களில் உயர்ந்தவர் அல்லாஹ்விடத்தில் சிறந்த தக்வா எனும் பயபக்தி உடையவர்கள்தான் (அல்குர்ஆன்)ஒரு மனிதரின் முன்னேற்றத்தில் ஊனம் என்பது ஒரு தடையல்ல!

 அண்ணல் நபி{ஸல்}அவர்களின் அன்பு தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும்(ரலி) அவர்கள் பிலால்(ரலி)அவர்களுக்கு பின் மதினாவில் முஃத்தினாக இருந்தார்கள்.கண் பார்வையற்ற அவர்கள் பொழுது புல்ர்வதைக்கூடதமது புலனரிவால் உணரும் திறமையுடைவராக இருந்தார்கள்.நபியவர்கள் போருக்கு சென்றால் மதினாவின் அமீராக இருந்தார்கள்.


ஹிஜ்ரி 14-ஆம் ஆண்டு காதிஸ்ய்யா போரில் கலந்து கொண்டு போர்க்களத்தில் ஷ்ஹீதானார்கள். போரில் வாளால் கரங்கள் வெட்டுண்டு பொது தனியாக தொங்கிய கையை காலில் வைத்து மிதித்து தோலின் பலத்தால் பிய்த்து எறிந்துவிட்டு மீண்டும் ஒரு கையோடு மட்டும் போர்புரிந்த ஸஹபாக்கள் மாற்று திறனாளிகளா.?

இரு கரங்கள் வெட்டப்பட்டு பின்னும் நெஞ்சில் கோடியை தாங்கிப் பிடித்து போர் செய்து உத்தம ஸஹாபாக்கள் மாற்றுதிறனாளியா ?

 ஊனம் ஞானத்தின் வாசலை அடைக்க முடியுமா ?

வாலிபனான ஒருவன் முதுமடைந்து கூனிகுறுகி வயோதிகளாகிவிட்டால் அவரும் மாற்றுத்திறனாளிதான் சொல்வீர்களா ?

கோழி நொண்டியானாலும் குழம்பு ருசி குறையுமா ?

தங்கத்தில் குறை கண்டால் தரம் குறையுமா ?

மாடு குருடானால் பால் கசக்குமா? மனிதன் மட்டும் ஏன் மாற்றுத்திறனாளி ஆகிறான்....?