வெள்ளி, 23 டிசம்பர், 2016

சிரியா அலெப்போ எரிகிறதுசிரியாவை சுற்றி 57 இஸ்லாமிய நாடுகளும்,அதன் இராணுவம் இருந்தும் ,,,

ஒரு இஸ்லாமிய நாடு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமில்லாமல் இவர்களை அழிப்பதற்க்கு உதவியும் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
எதனால் இப்படி கோழையாக ஆண்மையற்றவர்களாக ஆகிவிட்டது இஸ்லாமிய நாடுகள் ,,,

காரணம் அமெரிக்கா,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா போன்ற நாடுகள் இவர்களை அடிமை படுத்தி தனக்கு சாதகமாக தன் ஏஜெண்ட்டுகளை அங்கு ஆட்சி செய்ய வைத்திருக்கின்றார்கள்.
அப்டி ஒரு அடிமை தான் சிரியாவில் இருக்கும் அதிபர் பசர் அல் ஆசாத் ,,

ஆசாத் இராணுவமும்,ரஷ்யாவும் இணைந்து சிரியாவில் பொது மக்களை கொன்று குவிக்கின்றார்கள்,,,கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகளை சிரியாவில் கொன்று குவித்து விட்டார்கள்,லட்சக்கனக்கான மக்கள் கை கால் இல்லாமல் இருக்கின்றார்கள், கோடிக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி விட்டார்கள்,ஆசாத்,ரஷ்யா படையில் சிக்கி மானம் போகும் முன்
அங்குள்ள ஆண்கள் தங்கள் பெண்களை கொலை செய்வதற்க்கு ஃபத்வா கேட்கின்றார்கள் ,,

அங்குள்ள பெண்களோ தற்கொலை செய்ய அனுமதி இருக்கின்றதானு கேட்கின்றார்கள் அந்தளவுக்கு கற்பழிக்கப்பட்டு கொடுமை படுத்த படுகின்றார்கள் (அல்லாஹு அக்பர்)
இதற்க்கெல்லாம் என்ன முடிவு என்று என்றைக்காவது நாம் யோசித்திருக்கின்றோமா என்று உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகின்றேன்.

யா அல்லாஹ் நாங்கள் இவர்களுக்கு உதவி செய்யாமல் ஆகிவிட்டோம் அதனால் எங்களை தண்டித்து விடாதே ,,
மேலும் அவர்களுக்கு உதவி செய்து பாதுகாப்பாயாக ஆமீன்.

வியாழன், 26 ஜூன், 2014

ரமலானை இன்முகமாக வரவேற்போம்.

                                           

                                                 அஸ்ஸலாமு அலைக்கும்ரமலான்  மாதம் இந்த சமுதாயத்திற்க்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மாபெரும் பொக்கிஷமாகும். ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பானது மனிதனை பண்படுத்துகிறது.  

சிலர் ரமலானில் மற்ற காலங்களில் இருப்பதை போன்று சாதரணமாகவே இருக்கின்றார்கள் . இது அமல்களின் மாதம் முழுக்க முழுக்க நன்மைகள் செய்வதில் முற்பட வேண்டும் . ஷஹாபாக்களுக்கு நம்மை போன்று ரமலான் கடினமானது அல்ல.  

அவர்கள் பல நாட்கள் பசியோடு கழித்தவர்கள் ரமலான் வந்து விட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள் . நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு ரமலான் வருவதற்க்கு முன்பதாகவே ரமலானை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்கள்.

நோன்பை அல்லாஹ் நம் மீது கடமையாக்கிருக்கின்றான். கடமையயை சரி வர நிறைவேற்றுவது அடியானின் கடமையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.2;183

நமக்கு இவ்வாறு இயறையச்சத்தை ஏற்படுத்துவத்ற்க்கு இது போன்ற பல நல் அமல்களை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான் -அல்ஹம்துலில்லாஹ்.


“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)
     ரமலான் மாதம் வந்து விட்டால் சொர்கத்தின் வாசல்கள்              திறக்கப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள்.      அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956)  
 மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)நுல்: முஸ்லிம் (2119)
    இவ்வாறு பல நன்மைகளை வழங்கிட அல்லாஹ் தயாராக இருக்கின்றான்... அதை ஏற்றுகொள்வதற்க்கு நாம் தயாராக வில்லை.

ரமலானில் ஏரளமான சிறப்புகளை நாம் பெற்றிருக்கின்றோம்.
நோன்பு , குர்ஆன் இந்த மாதத்தில் இறங்கியது, ஆயிரம் மாதம் நின்று வணங்கிய நன்மையான இரவு இந்த மாதத்தில் தான் இருக்கின்றது, இரவுத்தொழுகை, இஃதிகாப்,ஆகுமானதாக ஆக்கப்பட்டவை பகலில் தடுக்கப்படுகிறது,சில சலுகைகள் நன்மையயை கருதி தான தருமம் செய்வது ,ஸகாத் கொடுப்பது ,பித்ரா கொடுப்பது இது போன்ற சிறப்புகளை நாம் பெற்றிருக்கின்றோம் .

அடுத்த வருட ரமலானில் நாம் உயிருடன் இருப்போமா இல்லையா என்பது நமக்கு தெரியாது. பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்போம். கிடைத்த ரமலானை பயன்படுத்தி கொண்டு அதிகமான நன்மைகளை செய்வதற்க்கு முற்படுவோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த ரமலானில் நன்மைகள் பல செய்து பலனுள்ளவையாக கழித்திட அருள் புரிவானாக ஆமீன்... 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மாற்று திறனாளி யார் ?

அஸ்ஸலாமு அழைக்கும் ...

     மாற்று திறனாளி,ஊனமுற்றவர் என்ற பாகுபாடு இஸ்லாத்தில் கிடையாது. அங்க அவையங்கள் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டவர் ஊனமுற்றவர் என்கிறோம்.

     ஆரோக்கியத்தால் ஊனமுற்று உண்ண முடியாமலோ உறங்கமுடியாமலோ உள்ளவர்களும், மனஉளைச்சல் டென்ஷனால் பாதிக்கப்பட்டவர்களும் ஊனமுற்றவகள் தான்.உழைக்காத சோம்பேறியும் ஊனம் தான்.

     உடல் ஊனம் அல்லது உள்ள ஊனம் இந்த இரண்டு பாதிப்புகளில் எது நம்மை தொட்டாலும் நாம் குறையுள்ள ஊனமானவர்கள் தான். எனவே குறைபாடுடையவர்களை அவர்களின் மனம் வருந்தும் படி குருடன் நொண்டி ஊமை கட்டையன் தடியன் என்று கூறக்கூடாது! ஏழை-பிச்சைகாரன் என்ற வார்தைகளால் வஞ்சனை சொற்களும் கூறக்கூடது.

   கருப்பன் சிவப்பன் அரபியன் அஜமி(அறியாதவன்)படிக்காதவன் முட்டாள் என்றும் திட்டக்கூடாது என்பதனை அருள்மறை குர்ஆனும் அண்ணல் பெருமானாறும்  கூறுகிறார்கள்.

   உங்களில் உயர்ந்தவர் அல்லாஹ்விடத்தில் சிறந்த தக்வா எனும் பயபக்தி உடையவர்கள்தான் (அல்குர்ஆன்)ஒரு மனிதரின் முன்னேற்றத்தில் ஊனம் என்பது ஒரு தடையல்ல!

 அண்ணல் நபி{ஸல்}அவர்களின் அன்பு தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும்(ரலி) அவர்கள் பிலால்(ரலி)அவர்களுக்கு பின் மதினாவில் முஃத்தினாக இருந்தார்கள்.கண் பார்வையற்ற அவர்கள் பொழுது புல்ர்வதைக்கூடதமது புலனரிவால் உணரும் திறமையுடைவராக இருந்தார்கள்.நபியவர்கள் போருக்கு சென்றால் மதினாவின் அமீராக இருந்தார்கள்.


ஹிஜ்ரி 14-ஆம் ஆண்டு காதிஸ்ய்யா போரில் கலந்து கொண்டு போர்க்களத்தில் ஷ்ஹீதானார்கள். போரில் வாளால் கரங்கள் வெட்டுண்டு பொது தனியாக தொங்கிய கையை காலில் வைத்து மிதித்து தோலின் பலத்தால் பிய்த்து எறிந்துவிட்டு மீண்டும் ஒரு கையோடு மட்டும் போர்புரிந்த ஸஹபாக்கள் மாற்று திறனாளிகளா.?

இரு கரங்கள் வெட்டப்பட்டு பின்னும் நெஞ்சில் கோடியை தாங்கிப் பிடித்து போர் செய்து உத்தம ஸஹாபாக்கள் மாற்றுதிறனாளியா ?

 ஊனம் ஞானத்தின் வாசலை அடைக்க முடியுமா ?

வாலிபனான ஒருவன் முதுமடைந்து கூனிகுறுகி வயோதிகளாகிவிட்டால் அவரும் மாற்றுத்திறனாளிதான் சொல்வீர்களா ?

கோழி நொண்டியானாலும் குழம்பு ருசி குறையுமா ?

தங்கத்தில் குறை கண்டால் தரம் குறையுமா ?

மாடு குருடானால் பால் கசக்குமா? மனிதன் மட்டும் ஏன் மாற்றுத்திறனாளி ஆகிறான்....?

புதன், 26 டிசம்பர், 2012

இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது ..?

அஸ்ஸலாமு அலைக்கும்..

அல்லாஹ் நமக்கு நேர் வழிகாட்டியாக நபி{ஸல்} அவர்களை படைத்துள்ளான்.

அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறாக கூருக்கிறான்.

     لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 33:21.
 அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

ஒரு முஸ்லிம் அவன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை இப்படி தான் வாழ வேண்டும் என்று நபி{ஸல்}சொன்னது மட்டும் இல்லாமல் வாழ்ந்து காண்பித்தார்கள்.ஆனால் இப்படி வாழாமல் நம் மன போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுக்காக வேண்டும்.

இன்றைக்கு நம் சமுதாய ஆண்,பெண்கள் சினிமாவில் வளம் வரும் நடிகர்,நடிகைகளை பின் பற்றுகின்றார்கள், அவர்களை போன்று உடை அணிவதும்,முடி வெட்டுவதும் நம்மவர்களின் பழக்கமாக ஆக்கி கொண்டனர்.

  يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். எனவே நாம் தவாறான வழியிலிருந்து நேரான வழிக்கு வரவேண்டும்.