வியாழன், 26 ஜூன், 2014

ரமலானை இன்முகமாக வரவேற்போம்.

                                           

                                                 அஸ்ஸலாமு அலைக்கும்



ரமலான்  மாதம் இந்த சமுதாயத்திற்க்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மாபெரும் பொக்கிஷமாகும். ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பானது மனிதனை பண்படுத்துகிறது.  

சிலர் ரமலானில் மற்ற காலங்களில் இருப்பதை போன்று சாதரணமாகவே இருக்கின்றார்கள் . இது அமல்களின் மாதம் முழுக்க முழுக்க நன்மைகள் செய்வதில் முற்பட வேண்டும் . ஷஹாபாக்களுக்கு நம்மை போன்று ரமலான் கடினமானது அல்ல.  

அவர்கள் பல நாட்கள் பசியோடு கழித்தவர்கள் ரமலான் வந்து விட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள் . நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு ரமலான் வருவதற்க்கு முன்பதாகவே ரமலானை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்கள்.

நோன்பை அல்லாஹ் நம் மீது கடமையாக்கிருக்கின்றான். கடமையயை சரி வர நிறைவேற்றுவது அடியானின் கடமையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.2;183

நமக்கு இவ்வாறு இயறையச்சத்தை ஏற்படுத்துவத்ற்க்கு இது போன்ற பல நல் அமல்களை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான் -அல்ஹம்துலில்லாஹ்.


“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)
     ரமலான் மாதம் வந்து விட்டால் சொர்கத்தின் வாசல்கள்              திறக்கப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள்.      அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956)  
 மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)நுல்: முஸ்லிம் (2119)
    இவ்வாறு பல நன்மைகளை வழங்கிட அல்லாஹ் தயாராக இருக்கின்றான்... அதை ஏற்றுகொள்வதற்க்கு நாம் தயாராக வில்லை.

ரமலானில் ஏரளமான சிறப்புகளை நாம் பெற்றிருக்கின்றோம்.
நோன்பு , குர்ஆன் இந்த மாதத்தில் இறங்கியது, ஆயிரம் மாதம் நின்று வணங்கிய நன்மையான இரவு இந்த மாதத்தில் தான் இருக்கின்றது, இரவுத்தொழுகை, இஃதிகாப்,ஆகுமானதாக ஆக்கப்பட்டவை பகலில் தடுக்கப்படுகிறது,சில சலுகைகள் நன்மையயை கருதி தான தருமம் செய்வது ,ஸகாத் கொடுப்பது ,பித்ரா கொடுப்பது இது போன்ற சிறப்புகளை நாம் பெற்றிருக்கின்றோம் .

அடுத்த வருட ரமலானில் நாம் உயிருடன் இருப்போமா இல்லையா என்பது நமக்கு தெரியாது. பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்போம். கிடைத்த ரமலானை பயன்படுத்தி கொண்டு அதிகமான நன்மைகளை செய்வதற்க்கு முற்படுவோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த ரமலானில் நன்மைகள் பல செய்து பலனுள்ளவையாக கழித்திட அருள் புரிவானாக ஆமீன்... 

2 கருத்துகள்: